Sunday, 16 August 2015

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு - சென்னையில் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் பேட்டி

சென்னையில் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தகவல் தெரிவித்துள்ளதாவது.,
அடுத்த 24 மணி நேர மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள் தற்போது மாவட்ட வாரியாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அது சில இடங்களில் மழைபெய்யாமல் போய்விடுகிறது. அதனை கருத்தில்கொண்டு விரைவில் அவற்றை வட்ட வாரியாக வழங்க இருக்கிறோம் என்றார். மேலும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்க்தவரை தமிழகம், புதுவையில் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றார். நேற்று அதிகபட்சம் பதிவான மழையளவு தமிழகத்தில் பொறுத்தவரை
மழையளவு:
11 செ.மீ திருவண்ணாமலை
8 செ.மீ திருவாடனை, சாத்தனூர்
7 செ.மீ. திருக்கோவிலூர், செட்டிக்குளம், விழுப்புரம், அரூர்

6 செ.மீ
காவேரிப்பாக்கம், ஊத்தங்கரை என்றார்.

No comments:

Post a Comment